Wednesday, May 23, 2007

டெல்லி சென்ற அனுபவம்......

இது எனது முதல் பதிவு



சிலநாட்களுக்கு முன்பு கான்பூரில் இருந்து நண்பனை சந்திக்கும் முகமாகவும் எனது சொந்த விசயமாகவும் டெல்லி சென்றிருந்தேன்.போகும்போதே ஒரே ஏழரைதான்..... பத்து மணிக்கு வரவேண்டிய இரயில் மூணு மணி நேரம் தாமதம். காலை ஒன்பது மணிக்கு போய் சேர்ந்தேன்.என் நண்பனுக்கு தான் அதிக சிரமம்.காலை அஞ்சு மணிக்கே வந்து இரயில் நிலையத்தில் காத்துகிட்டு இருந்தான்.அப்புறம் ரெண்டுபேரும் மெட்ரோ இரயில் புடிச்சு கரோல்பாக் வந்தோம்.கான்பூர்ல ரொட்டியும் பருப்பும் சாப்புட்டு சாப்புட்டு நாக்கெல்லாம் செத்துபோயிருச்சு.நல்ல தமிழ் ஹோட்டல் போய் காலை சாப்பாடு முடிச்சோம். நான் டெல்லி வந்த நோக்கங்களில் இதுவும் ஒண்ணு.அப்புறம் அங்கிருந்து பஸ் பிடிச்சு குர்ஹாவன் போனோம்.ரூம்ல போய் நல்ல தூக்கம் ஒண்ணு போட்டுட்டு சாயங்காலம் நாலுமணிக்கு எழுந்து வெளியே போனோம்.அங்கு நான் கண்ட காட்சிகளின் சிறுதொகுப்பு இது. இந்த சமூகம் கலாச்சாரம் என்ற பெயரால் எப்படி சீரழிந்து கொண்டிருக்கிறது, மேலை நாட்டு மோகத்தில் எப்படி மக்கள் வீழ்ந்துகிடக்கிறார்கள் என்பதற்கு ஓர் அடையாளம். குர்ஹாவனில் நெறைய ஷாப்பிங் மால்கள் உள்ளன.அங்கு வரும் மக்களில் பெரும்பாலோர் கலாச்சாரம் என்ற பெயரால் அணிந்துவரும் ஆடைகள் இருக்கிறதே அப்பப்பா.......... ஏண்டி போட்டுருக்கிறதே தொப்புள் தெரியுற மாதிரி அப்புறம் என்ன அதவேற இழுத்து இழுத்து மறைக்க try பண்ற. பெண்கள் தங்களது மேல் ஆடையில் இப்படி எழுதியிருக்கிறார்கள் "yes,its all about me", "Mangoes", "Look but don't touch", "fcuk" etc......ஆண்கள் என்ன மட்டும் விதிவிலக்கா...."why are you looking like this,i'm not your dad".எவனையாவது அவனோட தாய்மொழில பேசுறத பார்க்குறது ரெம்ப அபூர்வம். அங்கெ ஆங்கிலம் மட்டுமே பிரதான மொழி.அதிலும் தமிழன் பேசுற பேச்சு என்னமொ இவன் அப்பன் ஆத்தா எல்லாம் பூர்வீகம் பிரிட்டன்னு நெனப்பு.சிறுகுழந்தை முதல் வயதானவர்கள் வரை அனைவரும் அரைகுறை ஆடையுடன் செய்யும் அட்டகாசம்.....அந்த வகையில் தமிழன் ஏதோ ஓரளவுக்கு பரவாயில்லை.அங்கெல்லாம் பொண்ணுங்க தண்ணி அடிக்கிறது ரெம்ப சாதரணம். மறுநாள் டெல்லி இந்தியா கேட் போனோம்.அங்கதான் கிளைமாக்ஸ்.... கருமம் கருமம்.... பட்டபகல்ல வெட்டவெளியில லவ்வர்ஸ்ன்ற பேர்ல அவங்க அடிக்கிற கூத்து இருக்கே கொஞ்சம்கூட வெட்கமில்லாம இவன் மடியில அவ படுக்கிறதும் அவ மடியில இவன் படுக்கிறதும் முத்தம் கொடுக்கிறதும் சில்மிஷம் பண்றதும்.......ஊராடா அது..............