Monday, April 7, 2008

எனது கேள்விகள்......

கடவுள் யார் (எது)?

எங்கே இருக்கிறார் (து)?

கடவுளுக்கு உருவம் உண்டா இல்லையா?

உண்டு என்றால் எப்படி இருக்கும்?

இல்லை என்றால் ஏன் இத்தனை கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் இன்ன பிற இன்ன பிற..?

கடவுளை கண்டவர் யார்?

ஏன் அவரை (அதை) வணங்க வேண்டும்?

எப்பொழுதெல்லாம் கடவுளை தேடுகிறோம்?

நம்மை விட சக்தி வாய்ந்தவரா (தா)?

நான் அறிந்த வரையில் பொதுவாக எல்லோரும் கூறுவது "என்னை மிஞ்சிய சக்தி ஒன்று உண்டு அதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. அதை நான் வணங்குகிறேன்."

நம்மை விட சக்தி வாய்ந்த எல்லாவற்றையும் வணங்க வேண்டும் என்றால் மின்சாரம் நம்மை விட சக்தி வாய்ந்தது தான் இல்லையா அதை ஏன் நாம் வணங்குவதில்லை?

எல்லாம் செய்ய வல்ல கடவுளுக்கு ஏன் பாதுகப்பு தேவைப்படுகிறது?

தன்னையே காப்பாற்ற முடியாத கடவுள் நம்மை காப்பாற்றுவார் என்று எப்படி நம்புவது?

நம்பிக்கைதான் கடவுளா?

அப்படி என்றால் எதன் மீது நம்பிக்கை வைப்பது?

என் மீது நம்பிக்கை வைத்தால் நான் கடவுளா?

தன்னை கடவுள் அல்லது கடவுளின் அவதாரம் (வாழும் தெய்வம்) என்று சொல்லிக் கொள்பவர்கள்தான் கடவுளா?

வாயில் இருந்து தங்கத்தில் லிங்கம் எடுக்க முடியும் என்றால் தங்க சுரங்கம் எல்லாம் எதற்கு?

அவர் மூலமாக எல்லோருக்கும் தங்கம் கொடுக்கலாம் தானே!
ஏன் இன்னும் பசி பட்டினியால் மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள்?

கடவுள் முன் அனைவரும் சமம் என்றால் சாதி, மத, ஏழை பணக்கார பாகுபாடு ஏன்?

எல்லோரும் கோவிலுக்குள் செல்ல முடிவதில்லையே ஏன்?

மறுபிறவி உண்டா இல்லையா?

உண்டு என்றால் உன்னுடைய மறுபிறவி என்ன?

சொர்க்கம், நரகம் என்று ஒன்று உண்டா?

ஒவ்வொரு மதத்தவருக்கும் அவர்களுடைய கடவுள் மட்டும் தான் உண்மையான கடவுள் என்றால் மற்ற மத்தினர் எல்லாம் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களா?



கேள்விகள் தொடரும்......

நன்றியுடன்,

கிராமத்தான்...