Wednesday, September 12, 2007

சாதி ஒழிப்போம்......

சாதின்னா என்ன,அது எப்படி வந்தது,அதை பத்தியெல்லாம் பேசவேண்டாம்.இன்னும் சாதி இருக்கு அதை எப்படி ஒழிக்கிறது. ஏன்டா விளக்கெண்ண.....உன்ன ஒருத்தன் அடிமைபடுத்துறான்னு உனக்கு எங்கோ சுடுதுல்ல. அப்புறம் நீ என்ன மயிருக்குடா இன்னொருத்தன அடிமைபடுத்த நினைக்கிற.செட்டியாருக்கு தேவர் அடிமை, தேவருக்கு பள்ளன் அடிமை, பள்ளனுக்கு பறையன் அடிமை, பறையனுக்கு சக்கிலியன் அடிமை, சக்கிலியனுக்கு வண்ணான் அடிமை.வண்ணானுக்கு இன்னொருத்தன்...நாம எல்லோருக்கும் வாயில வைக்க ஒருத்தன் இருக்கான். அவனுக்கு நாம எல்லோரும் அடிமை. ஊருல ஒரு நல்ல காரியம்னா, கோவில் திருவிழான்னா அவன கூட்டிகிட்டு வர்ற. அவனுக்கு உன்னோட சாமிக்கு மேல மரியாதை கொடுக்குற. அவன் என்ன சொன்னாலும் சாமி சொன்னா சரிதான் அப்படின்னு கோவில் மாடு மாதிரி தலைய ஆட்டிகிட்டு இருக்க. அவன் என்ன பண்றான், மணிய ஆட்டிட்டு இருக்குறது எல்லாத்தையும் அள்ளிகிட்டு போயிறான்.அவனுக்கு நீ உழைச்சு சம்பாதிச்சு வாங்கிவச்ச பொருள் தீட்டு இல்ல,ஆனா நீ தீட்டு. என்னைக்காவது உன்ன அவன் வீட்டுக்குள்ள நுழைய விட்டுருக்கானா. நீ ஒரு நாளைக்கு அவன உன் வீட்டுக்கு வெளிய நிறுத்து பார்ப்போம். உனக்குத்தான் சொரணை எருமைய விட அதிகம் ஆச்சே.ஆமா உனக்கு கீழே இருக்கிறவன்னு சொல்லிக்கிட்டு நீ இன்னொருத்தன வீட்டுக்குள்ள ஏன் தெருவுக்குள்ள கூட விடமாட்டேங்கிற.அப்புறம் அவன் எப்படி உன்ன உள்ள விடுவான். அவங்களுக்குள்ள என்னைக்காவது சண்டை சச்சரவு வந்துருக்கா. உனக்கு அவன் வச்சா மட்டும் இனிக்குது. ஊர்ல கூட படிக்கிற நண்பன் ஒருத்தன், அவன நான் வாடா, போடான்னுதான் கூப்பிடுவேன். அந்த பையன எங்கப்பா வாங்க, போங்கன்னுதான் கூப்பிடுவார்(டனும்). ஏன்னா அவன் மேல் சாதி. அதே மாதிரி இன்னொருத்தன், அவனோட அப்பா என்னை வாங்க, போங்கன்னு தான் கூப்பிடுவார். நான் அவரை வா,போன்னு மரியாதை இல்லாம கூப்பிடலாம். ஏன்னா அவர் கீழ்சாதி.உன் அப்பாவ உன் கூட படிக்கிற ஒருத்தன் வா,போன்னு மரியாதை இல்லாம கூப்பிடும்போது உனக்கு சுடுதில்ல, அதேமாதிரி நீ இன்னொருவரை கூப்பிடும் போது அவரோட மகனுக்கும் சுடுமில்ல. அப்புறம் என்ன மயிருக்குடா அப்படி பண்றீங்க. நீ ஒருத்தனை அடிமையாக்க நினைச்சேன்னா உன்னையும் ஒருத்தன் அடிமைபடுத்துவான்.முதல்ல மனுசன மதிக்க கத்துக்க, கத்துக்கொடு.

அன்புடன்

கிராமத்தான்....

1 comment:

கருப்பு said...

அருமையான கேள்வி நண்பரே. நல்ல பதிவு.