என் நண்பனுடன் மொக்கை போட்டுக்கொண்டிருக்கும் போது ஒரு சீரியசான விவாதம் வந்தது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
நான் : மச்சான் நான் விவசாயம் பார்க்க போறேன்.
நண்பன் : டேய் உனக்கு என்ன பைத்தியமா? IIT ல படிச்சுட்டு விவசாயம் அது இதுன்னு பினாத்திக்கிட்டு இருக்க.
நான் : ஏன் மச்சான் படிச்சவனெல்லாம் விவசாயம் பார்க்க கூடாதா? அது மட்டுமில்லாம நான் college ல சேர்வதற்க்கு முன்னால் விவசாயம் தானே பண்ணிகிட்டு இருந்தேன் (இப்பவும் வீட்டுல விவசாயம்தான்).
நண்பன் : அதுக்கு இல்ல இப்பவெல்லாம் விவசாயத்துல பெரிய வருமானம் இல்ல. அது மட்டுமில்லாம இப்பவெல்லாம் நிறைய விவசாயிகள் கடன் தொல்லைன்னு தற்கொலை பண்ணிக்கிறாங்க டா.
நான் : சரி மச்சான் அதுக்கெல்லாம் யாரு காரணம்ன்னு நினைக்கிற? நாம தான் மச்சான்.
நண்பன் : நாம எப்படி மச்சான் காரணம்? சரியான மழை இல்லாம இருக்கும் அல்லது வேற ஏதாவது காரணமா இருக்கும்.
நான் : சரி விவசாயிக்கு எப்படி கடன் தொல்லை வருது? இப்போ அவனுடைய தேவைக்கு மட்டும் விவசாயம் பார்த்தான்னு வை கடன் தொல்லை வராது. நமக்கு எல்லாம் சேர்த்து பண்றாம்பாரு அதனாலதான்.
நண்பன் : சரி மச்சான் இதுக்கெல்லாம் என்ன தீர்வு?
நான் : யாரெல்லாம் விவசாயம் பார்க்கிறங்களோ அவங்க அவர்களுடைய தேவைக்கு மட்டும் உற்பத்தி செய்தால் போதும் இதுதான் ஒரே நிரந்தர தீர்வு. மத்தவனுக்கெல்லாம் உழைச்சு உழைச்சுத்தான் அவன் இப்ப கடன்பட்டு தற்கொலை பண்ணிக்கிட்டு சாகிறான். எவனுக்கெல்லாம் சோறு தேவையோ அவனையெல்லாம் வயலில் இறங்கி வேலை பார்த்து சாப்பிடட்டும். இப்பவெல்லாம் எல்லாவனும் பார்ப்பான் மாதிரி வேசம் போட்டுகிட்டு computer தட்டிக்கிட்டு research ன்னு சொல்லிக்கிட்டு ஊருல கூழ் கஞ்சி குடிச்சதெல்லாம் pizza அது இதுன்னு தின்னுகிட்டு அலையுது. எந்த நாய்க்கும் தெரியமாட்டேங்குது என்னதான் software வேலை பார்த்தாலும் research பண்ணினாலும் பணம் சேர்த்தாலும் சோத்துக்கு வழி இயற்க்கை தான்னு. நீ software develope பண்ணினாலும் சந்திரனுக்கு ராக்கெட் அனுப்பினாலும் விவசாயிக்கு என்ன கிடைக்குது? அப்ப அவன் மட்டும் எதுக்கு உனக்கு உழைச்சுப் போடணும்? நானும் IIT Kanpur ல research பண்ணிகிட்டுதான் இருக்கேன். ஆனால் அதனால் ஒரு பயனும் இல்லை. நான் மட்டும் இல்லை மொத்த IIT யே இப்படித்தான் இருக்கு. அவனுடைய வரிப்பணத்துல சாப்பிட்டுகிட்டு அவனுக்கு ஒண்ணுமே பண்ணுவது கிடையாது. இங்கே research பேரில் இயற்கையை எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீரழிச்சுகிட்டு இருக்கோம். எப்ப விவசாயி உற்பத்தி பண்ற பொருளுக்கு அவனே விலை நிர்ணயம் செய்கிறானோ அப்போதுதான் விவசாயி நிலமை உயரும். எல்லாவனும் அவன்கிட்ட அய்யா சாமி தர்மம் பண்ணு சொல்லி அவன்கிட்ட வரணும்.
" உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்
வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்".
நண்பன் : அப்ப என்னைப்போல நிலம் இல்லாதவனெல்லாம் என்ன செய்வது? அதுமட்டுமில்லாமல் எனக்கு விவசாயம் பண்ண தெரியாது அப்ப நான் என்ன செய்ய?
நான் : என்னுடைய தேவைக்கு போக மீதி இடத்தை நான் தருகிறேன். research மட்டும் பிறக்கும் போதே பண்ணிக்கிட்டா இருந்தோம் எல்லாம் கத்துக்க வேண்டியதுதான்.
இப்ப நம்ம நிதியமைச்சர் சிதம்பரமும் பிரதமர் மன்மோகன் சிங்கும் பட்ஜெட் போடுறாங்க. இவனுங்க என்னைக்காவது ஒருவேளை சோத்துக்கு வழியில்லாம இருந்திருக்காங்களா? வறுமைன்னா என்னன்னு தெரியுமா? அப்ப இவனுங்க எப்படி பட்ஜெட் இருக்கும்? அன்னைக்கு கியூபா நாட்டின் பொருளாதார துறை அமைச்சர் மாவீரன் சே குவேரா. அந்த மாவீரனுக்கு அத்தனை தகுதியும் இருந்தது. அவன் நிலத்தில் இறங்கி வேலை பார்த்தான், மூடை தூக்கினான். இவங்களுக்கு அமெரிக்காவுக்கு கூட்டி கொடுக்குற வேலையை தவிர எதுவும் தெரியாது.
எல்லாரும் விவசாயிடம் வந்து கைகட்டி நிற்கும் நிலை சீக்கிரம் வரும். வரவேண்டும். அந்த நாளை நோக்கி அதற்க்கான சிறு முயற்சியில்.......
கிராமத்தான்.........
இந்த பதிவை படிப்பவர்கள் தங்கள் கருத்துக்களையும் திட்டங்களையும் பதிவு செய்ய பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
10 comments:
இன்றைய விவசாயிகளின் உண்மை நிலைதனை புட்டுப்புட்டு வைத்திருக்கிறீர்கள்!!!
எல்லாரும் விவசாயிடம் வந்து கைகட்டி நிற்கும் நிலை சீக்கிரம் வரும். வரவேண்டும். அந்த நாளை நோக்கி அதற்கான சிறு முயற்சியில்.......
வாழ்த்துக்கள்
பகிர்தலுக்கு நன்றி
நண்பர்கள் விடாது கருப்பு மற்றும் பேரரசன் ..... அவர்களுக்கு நன்றி
அறிவு சொட்டுது. நீ IITல படிக்கற ? விவசாயி தனக்கு மட்டும் விவசாயம் செய்வாராம், அப்ப அவனே துணி தெச்சு, மோட்டார் வண்டி தயாரிச்சு ஓட்டுவாணா? விவசாயி விவசாயம் பண்றான், எப்படி ஒருத்தன் கணினி வேல செய்யறானோ, அத்த மாரி ஒரு வேல, அவ்ளோதான். நீயா பெரிய படம் காட்டாத. உருப்படியா யோசிச்சு researcha முடி.
தன்னுடைய பெயரைக் கூட தைரியமாக சொல்ல முடியாத கோழையிடம் விவாதம் செய்வது வீண்.
வருகைக்கு நன்றி.
என் பேரு குப்புசாமி. இப்போ பதில் சொல்லும்மா மின்னலு! இல்ல குப்பர படுத்துக்கிட்டு படு. இனிமே ரொம்ப யோசிக்காத
வணக்கம் ஐயா குப்புசாமி....
இனிமேல் நான் யோசிக்கலை நீங்களே யோசிங்க..... ஏன் விவசாயி மட்டும் அதிகமா தற்கொலை பண்றான்னு.....
"நமது நாடு அடிப்படையில் விவசாய நாடு. விவசாயிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டிய நமது அரசியல்வாதிகள் அணுஆயுத ஒப்பந்தத்தை தலையில் தூக்கிக் கொண்டு திரிகிறார்கள். சமீபத்தில் MIDS ஐ சேர்ந்த நாகராஜன் என்பவர் விவசாய தற்கொலைச் சாவுகள் குறித்து மேர்கொண்ட ஆய்வின் முடிவில் 2002க்கு பிறகு 30 நிமிடத்திற்கு ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்வதாக புள்ளி விபரம் தெரிவிக்கிறார்."
நீங்க கணினி வேலை செய்வதால் அவனுக்கு என்ன லாபம். பணம் என்று ஒன்று இல்லாமல் பழைய பண்ட மாற்று முறை வரும்போது தெரியும் நீங்க என்ன கொடுத்து அரிசி வாங்குவீங்க....
http://www.kumudam.com/magazine/Theranadi/2008-04-01/pg1.php
goods, services என்ற இரண்டு விதம் இருப்பதே தெரியாதா? இதே கேள்வியை ஒரு துப்புரவு பணி செய்பவரை, குளம் வெட்டுபவர், செருப்பு தைப்பவரை பார்த்து கேட்பீர்களா? - குப்புசாமி
It is 100% true . Day will come soon......country like Somalia people will die without food . Now all cows are eating plastic ....this will continue for Human being oneday in near future .....Every years production rate of Agri products are reducing 15-20%.......IN FUTURE MONEY MAKER IS ONE WHO HAVE LAND WITH AGRICULTURE
Thank You Samy....
Post a Comment