Thursday, November 1, 2007

பெரும்பான்மையான சாப்டுவேர் இஞ்சினியர்கள் கேட்பது...........

இங்கே பெரும்பான்மையான சாப்டுவேர் இஞ்சினியர்கள் கேட்பது...........

1. அரசாங்க ஊழியர் மாதிரி நாங்க எட்டுமணி நேரமா வேலை பார்க்கிறோம்?

2. அதனால எங்களுக்கு mental stress வருது. வார கடைசியில் enjoy பண்றோம் இதுல என்ன தப்பு?


சரி எதுக்கு 10-12 மணி நேரம் வேலை பார்க்குறீங்க...எட்டு மணி நேரம் மட்டும் வேலை பார்க்கவேண்டியதுதான. ஏன்னா 16 மணி நேரம் அதாவது 2 ஆள் வேலைய உங்கிட்ட கொடுத்து ஒரே நாள்ல முடிச்சுடுன்னு சொன்னா எப்படி முடியும் அதனால 12 மணி நேரம் வேலை பார்க்கிற.யாராவது 8 மணி நேரத்துக்கு மேல வேலை பார்க்க முடியாதுன்னு சொல்ல முடியுமா?. மாசம் 20,000 - 50,000 வரை கிடைக்கிறது அப்படின்னுட்டு மாடு மாதிரி உழைக்கிறது. அப்புறம் mental stress வரத்தான் செய்யும். உன்னுடைய உழைப்ப உறிஞ்சுக்கிட்டு அவன் உனக்கு கொடுக்கிற சம்பளம் ஒரு ஆள் சம்பளத்துக்கும் குறைவு.ஆனால் உனக்கு அவன் ஸ்டார் ஹோட்டல்ல வாங்கி கொடுக்கிற பீர்தான் பெருசா தெரியுது. நீங்களெல்லாம் செம்மறியாட்டுக்கூட்டம் மாதிரி.......எவ்வளவு படிச்சாலும் உங்களால கேள்வி கேட்க முடியாது. அதே நேரத்தில் ஒரு விவசாய கூலி வேலை பார்க்கிறவன் சொல்லுவான் 8 மணி நேரத்துக்கு மேல வேலை பார்க்க முடியாதுன்னு....ஏன்னா அவனுக்கு பணத்தை விட நிம்மதி தான் முக்கியம். அதனால அவனுக்கு mental stress இல்ல.

வறுமையில் உழன்றவனுக்குத்தான் பணத்தின் அருமை தெரியும். சம்பாதிக்கிறேன் என்பதற்காக ஆடம்பரமாக செலவு செய்வதை ஏற்றுகொள்ள முடியாது. சரி இவ்வளவு சம்பாதித்தும் நிம்மதியாக இருக்கிறாயா அதுவும் இல்லை. ஏன்னா எவ்வளவு வருமானம் வருதோ அதுக்கு மேல உன்னுடைய தேவைகளை அதிகரித்து கொள்கிறாய். ஆனால் அன்றாட கூலி வேலை செய்பவன் அப்படி இல்லை அதனால் தான் அவன் கால் வயிற்று கஞ்சி குடித்தாலும் நிம்மதியா இருக்கான்.

அடுத்து கலாச்சாரம்...

ஆடை - ஆபாசம் - அனைவருக்கும் காட்சிபொருள் (இருபாலரையும் தான்). இல்லைன்னா சில பேர் இவன் ஆணாதிக்கவாதின்னு சொல்லிடுவங்க.

அந்தரங்கம் - அலுவலகத்திலேயே அரங்கேறுகிறது....

மொழி - என் மொழி ஏன் இத்தனை பாடுபடுகிறது. தமிழனிடம் கூட தமிழில் பேச முடியாதா உன்னால். உங்க அப்பன்,ஆத்தா எல்லாம் பிரிட்டன்ல இருந்து வந்தவங்களா?

ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேல் அழிவில்லாமல் இருந்த மொழி இப்போது வேகமாக சீரழிந்து கொண்டிருக்கிறது.ஒன்றை மட்டும் நன்றாக புரிந்து கொள்ளுங்கள், ஒரு மொழி சீர(அ)ழிகிறது என்றால் ஒரு இனமே அழிகிறது என்று அர்த்தம். தமிழ் இனம் அழிந்து கொண்டிருக்கிறது.


மது - மாது - அமெரிக்க கலாச்சாரம். வடிவேலு சொல்ற மாதிரி "இவன் ஆள அவன் வச்சிருக்கேன்றான், அவன் ஆள இவன் வச்சிருக்கேன்றான்,சே சே ஊராடா இது".

சரி இவையெல்லாம் புறமாற்றங்கள்.....

அகமாற்றங்கள் என்னென்ன.....

முதலில் சாதி.....

ஆரம்பத்தில சாதியே இல்லாமத்தான் இருந்தது. அப்புறம் இரண்டு சாதி ஒன்று ஆண் மற்றொன்று பெண். அடுத்து ஏழை,பணக்காரன், அடுத்தபடியாக ஆரியன் உள்ளே வந்தான் அப்ப வந்தது ஆயிரத்தியெட்டு சாதி. இப்ப புதுசா ரெண்டு சாதி IT சாதி / NON IT சாதி.
IT சாதியில் இருக்கிறவன் IT சாதியிலதான் கல்யாணம் பண்றான்.

இப்பவெல்லாம் மணமகன்(ள்) தேவை விளம்பரத்தில் சாதி, சம்பளம், வயது, உயரம், கல்வி, IT துறையில் பணிபுரியும் மணமகன்(ள்)க்கு இதே துறையிலுள்ள மணமகன்(ள்) தேவை.
சிலபேர் சொல்லலாம் IT field ல இருக்குறவங்க அதே fieldல இருக்குறவங்கள கல்யாணம் பன்ணிகிட்டா இந்த சாதி பிரச்சனை தீறும் என்று. ஆனால் ஒரு விசயம் கவனிக்கப்படவேண்டியது இவன் மனதில் அடுத்த துறையில் (NON IT) குறைந்த சம்பளத்தில் வேலை செய்பவன் எல்லாம் தீண்டதகாதவன் என்ற நிலைக்கு பார்ப்பதுதான்.

அடுத்தது பணம்....

பணம் என்றால் பிணமும் வாயை பிளக்கும்... ஆமாம் பிளந்து கொண்டுதான் இருக்கிறது.

ஒரு (அமெரிக்கா, பிரிட்டிஸ் ) நிறுவனத்தில் நீ வேலை செய்கிறாய் அதற்காக உனக்கு பணம் தருகிறது. இவ்வளவுதான் கம்பெனிக்கும் உனக்கும் உண்டான உறவு. ஆனால் உன்னுடைய கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் அமெரிக்கா, பிரிட்டிஸ் காரனைப்போல் மாற்றமுயல்வது ஏன்? வெளிப்படையான உதாரணம் சொல்வதென்றால் இன்போசிஸ் நாரயணமூர்த்தி தேசியகீதம் பற்றி பேசியது.ஏன் நம் நாட்டு தேசியகீதத்தை கூட பாட மறுக்கிறீர்கள் அதுவும் இந்நாட்டின் முதல் குடிமகன் கலந்து கொண்ட நிகழ்ச்சியில். அந்த அளவிற்க்கு அந்நிய நாட்டு மோகம் ஏன்?


அதற்காக மென்பொருள்துறையில் இருக்கும் அனைவரையும் குற்றம் சொல்லவில்லை. ஆனால் அந்த விகிதம் மிக மிக அதிகம்.


மாற்றத்தை நம்பிக்கையுடன் எதிர்பார்த்துகொண்டிருக்கும்,

கிராமத்தான்...