தொடர்ந்து பயணிக்கிறேன்
உந்தன் வளைவு நெளிவுகளில்
இமைக்காமல் இரசிக்கிறேன்
பச்சை போர்வைக்குள்ளான
உந்தன் மேடு பள்ளங்களை
கண்களால் களவாடுகிறேன்
படச்சுருளால் முடியாத
உந்தன் அழகை
நீயோ
வெட்கப்பட்டு மறைத்துக்கொள்கிறாய்
வெண்சரிகை கொண்டு
உன்னில் என்னை தொலைக்கிறேன்
என்னில் உன்னை தேடுகிறேன்
*************************************************************
தவம்....................
நீ நடந்துசென்ற
தெரு வீதியில்
உந்தன் பாதசுவடுகளால்
எழுதிச்சென்ற
எனக்கான
உந்தன் வார்த்தைகளை பொறுக்க.....
*************************************************************
தாய்பாலை உண்டு பெருகிய
இரத்தத்தை......
தெரு வீதியில்
தாய் மண்ணில்
சிந்திய நாளை நினைத்து...........
கர்வப்பட்டு
கர்வமின்றி முத்தமிடுகிறேன்........
அப்போது விழுந்த
கண்ணீர் துளி கண்டு
வெட்கப்பட்டு
தானும் அழுகிறது
மேகம் மழையாய்
மனவீதியில்......... நினைவலைகள்
சொட்டிக்கொன்டுதான் இருக்கின்றன மழை விட்டும்
இலை சொட்டும் நீராய்.........
3 comments:
The starting lines of your brother's first poem here is impressive. Seeman's fiery interview is surely a treat.
Keep it up, guy.
chinnavan started to write this and all... do you remember of his words in his first month of college? elam nra kodumai... but good da... inum konjam kuda ilakiyathanama irundha nalla irukum... means some more literary words could increase the value of it...
Excellent wordings.. 1.thodarnthu payanikkirean unthan valaivu nelivugalil..
2.Ilai sottum neeraai..
These lines which expile me from my innermind..
Try to collect all his creations,In future this would bcom his Green memories..
Post a Comment