Thursday, November 1, 2007

பெரும்பான்மையான சாப்டுவேர் இஞ்சினியர்கள் கேட்பது...........

இங்கே பெரும்பான்மையான சாப்டுவேர் இஞ்சினியர்கள் கேட்பது...........

1. அரசாங்க ஊழியர் மாதிரி நாங்க எட்டுமணி நேரமா வேலை பார்க்கிறோம்?

2. அதனால எங்களுக்கு mental stress வருது. வார கடைசியில் enjoy பண்றோம் இதுல என்ன தப்பு?


சரி எதுக்கு 10-12 மணி நேரம் வேலை பார்க்குறீங்க...எட்டு மணி நேரம் மட்டும் வேலை பார்க்கவேண்டியதுதான. ஏன்னா 16 மணி நேரம் அதாவது 2 ஆள் வேலைய உங்கிட்ட கொடுத்து ஒரே நாள்ல முடிச்சுடுன்னு சொன்னா எப்படி முடியும் அதனால 12 மணி நேரம் வேலை பார்க்கிற.யாராவது 8 மணி நேரத்துக்கு மேல வேலை பார்க்க முடியாதுன்னு சொல்ல முடியுமா?. மாசம் 20,000 - 50,000 வரை கிடைக்கிறது அப்படின்னுட்டு மாடு மாதிரி உழைக்கிறது. அப்புறம் mental stress வரத்தான் செய்யும். உன்னுடைய உழைப்ப உறிஞ்சுக்கிட்டு அவன் உனக்கு கொடுக்கிற சம்பளம் ஒரு ஆள் சம்பளத்துக்கும் குறைவு.ஆனால் உனக்கு அவன் ஸ்டார் ஹோட்டல்ல வாங்கி கொடுக்கிற பீர்தான் பெருசா தெரியுது. நீங்களெல்லாம் செம்மறியாட்டுக்கூட்டம் மாதிரி.......எவ்வளவு படிச்சாலும் உங்களால கேள்வி கேட்க முடியாது. அதே நேரத்தில் ஒரு விவசாய கூலி வேலை பார்க்கிறவன் சொல்லுவான் 8 மணி நேரத்துக்கு மேல வேலை பார்க்க முடியாதுன்னு....ஏன்னா அவனுக்கு பணத்தை விட நிம்மதி தான் முக்கியம். அதனால அவனுக்கு mental stress இல்ல.

வறுமையில் உழன்றவனுக்குத்தான் பணத்தின் அருமை தெரியும். சம்பாதிக்கிறேன் என்பதற்காக ஆடம்பரமாக செலவு செய்வதை ஏற்றுகொள்ள முடியாது. சரி இவ்வளவு சம்பாதித்தும் நிம்மதியாக இருக்கிறாயா அதுவும் இல்லை. ஏன்னா எவ்வளவு வருமானம் வருதோ அதுக்கு மேல உன்னுடைய தேவைகளை அதிகரித்து கொள்கிறாய். ஆனால் அன்றாட கூலி வேலை செய்பவன் அப்படி இல்லை அதனால் தான் அவன் கால் வயிற்று கஞ்சி குடித்தாலும் நிம்மதியா இருக்கான்.

அடுத்து கலாச்சாரம்...

ஆடை - ஆபாசம் - அனைவருக்கும் காட்சிபொருள் (இருபாலரையும் தான்). இல்லைன்னா சில பேர் இவன் ஆணாதிக்கவாதின்னு சொல்லிடுவங்க.

அந்தரங்கம் - அலுவலகத்திலேயே அரங்கேறுகிறது....

மொழி - என் மொழி ஏன் இத்தனை பாடுபடுகிறது. தமிழனிடம் கூட தமிழில் பேச முடியாதா உன்னால். உங்க அப்பன்,ஆத்தா எல்லாம் பிரிட்டன்ல இருந்து வந்தவங்களா?

ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேல் அழிவில்லாமல் இருந்த மொழி இப்போது வேகமாக சீரழிந்து கொண்டிருக்கிறது.ஒன்றை மட்டும் நன்றாக புரிந்து கொள்ளுங்கள், ஒரு மொழி சீர(அ)ழிகிறது என்றால் ஒரு இனமே அழிகிறது என்று அர்த்தம். தமிழ் இனம் அழிந்து கொண்டிருக்கிறது.


மது - மாது - அமெரிக்க கலாச்சாரம். வடிவேலு சொல்ற மாதிரி "இவன் ஆள அவன் வச்சிருக்கேன்றான், அவன் ஆள இவன் வச்சிருக்கேன்றான்,சே சே ஊராடா இது".

சரி இவையெல்லாம் புறமாற்றங்கள்.....

அகமாற்றங்கள் என்னென்ன.....

முதலில் சாதி.....

ஆரம்பத்தில சாதியே இல்லாமத்தான் இருந்தது. அப்புறம் இரண்டு சாதி ஒன்று ஆண் மற்றொன்று பெண். அடுத்து ஏழை,பணக்காரன், அடுத்தபடியாக ஆரியன் உள்ளே வந்தான் அப்ப வந்தது ஆயிரத்தியெட்டு சாதி. இப்ப புதுசா ரெண்டு சாதி IT சாதி / NON IT சாதி.
IT சாதியில் இருக்கிறவன் IT சாதியிலதான் கல்யாணம் பண்றான்.

இப்பவெல்லாம் மணமகன்(ள்) தேவை விளம்பரத்தில் சாதி, சம்பளம், வயது, உயரம், கல்வி, IT துறையில் பணிபுரியும் மணமகன்(ள்)க்கு இதே துறையிலுள்ள மணமகன்(ள்) தேவை.
சிலபேர் சொல்லலாம் IT field ல இருக்குறவங்க அதே fieldல இருக்குறவங்கள கல்யாணம் பன்ணிகிட்டா இந்த சாதி பிரச்சனை தீறும் என்று. ஆனால் ஒரு விசயம் கவனிக்கப்படவேண்டியது இவன் மனதில் அடுத்த துறையில் (NON IT) குறைந்த சம்பளத்தில் வேலை செய்பவன் எல்லாம் தீண்டதகாதவன் என்ற நிலைக்கு பார்ப்பதுதான்.

அடுத்தது பணம்....

பணம் என்றால் பிணமும் வாயை பிளக்கும்... ஆமாம் பிளந்து கொண்டுதான் இருக்கிறது.

ஒரு (அமெரிக்கா, பிரிட்டிஸ் ) நிறுவனத்தில் நீ வேலை செய்கிறாய் அதற்காக உனக்கு பணம் தருகிறது. இவ்வளவுதான் கம்பெனிக்கும் உனக்கும் உண்டான உறவு. ஆனால் உன்னுடைய கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் அமெரிக்கா, பிரிட்டிஸ் காரனைப்போல் மாற்றமுயல்வது ஏன்? வெளிப்படையான உதாரணம் சொல்வதென்றால் இன்போசிஸ் நாரயணமூர்த்தி தேசியகீதம் பற்றி பேசியது.ஏன் நம் நாட்டு தேசியகீதத்தை கூட பாட மறுக்கிறீர்கள் அதுவும் இந்நாட்டின் முதல் குடிமகன் கலந்து கொண்ட நிகழ்ச்சியில். அந்த அளவிற்க்கு அந்நிய நாட்டு மோகம் ஏன்?


அதற்காக மென்பொருள்துறையில் இருக்கும் அனைவரையும் குற்றம் சொல்லவில்லை. ஆனால் அந்த விகிதம் மிக மிக அதிகம்.


மாற்றத்தை நம்பிக்கையுடன் எதிர்பார்த்துகொண்டிருக்கும்,

கிராமத்தான்...

22 comments:

Nimal said...

//அதற்காக மென்பொருள்துறையில் இருக்கும் அனைவரையும் குற்றம் சொல்லவில்லை. ஆனால் அந்த விகிதம் மிக மிக அதிகம்.//

"மிக மிக " ஐ தவிர்த்து உங்களுடய கூற்றுக்கு ஒத்துக்கொள்கிறேன்...!
(நான் அறிந்திருப்பது இலங்கை சாப்டுவேர் இன்ஞியர்கள் பற்றி, நானும் தான்... உங்கள் ஊர் நிலைவரம் சரியாக தெரியாது...)

TBCD said...

கும்மிட்டீங்களே...நல்ல சொன்னீங்க....

Unknown said...

வருகைக்கு நன்றி...

//"மிக மிக " ஐ தவிர்த்து உங்களுடய கூற்றுக்கு ஒத்துக்கொள்கிறேன்...!//

மிக அதிகம் என்பதையாவது ஒத்துக்கொள்வீர்களா நிர்மல்....

Unknown said...

வருகைக்கு நன்றி...

tbcd...

வசந்தம் ரவி said...

Good thought.

வாக்காளன் said...

கிராமத்தான் அவர்களே,,

///IT சாதியில் இருக்கிறவன் IT சாதியிலதான் கல்யாணம் பண்றான். //

சிரிப்புதான் வருது..இதை பார்க்க.. என்னமோ ஐ டி - ஐ டி ல தான் திருமணம் நடப்பது போல.. இருக்கு..எனக்கு தெரிந்தே மிக பல ஐ டி நண்பர்கள் வேறு துறை பென்களை மணந்துள்ளர். அதிலும் பலர் housewife.

MRS and MR டாக்டர் அதிகம்.. கவணித்துள்ளீரா???

மேலும்.. IT la இருப்பவனை விட non IT இல் இருப்போர் நிம்மதியாக உள்ளனர் என்று கூறியுள்ளீர் அப்புறம் ஏன் இந்த வகை பதிவுகள்????

//அவன் ஸ்டார் ஹோட்டல்ல வாங்கி கொடுக்கிற பீர்தான் பெருசா தெரியுது//

பீர் வாங்கி தரவில்லை என்று வேலையை ரிசைன் பன்னுபர்கள் அதிகமா? இல்லை.. சரியான சம்பளம் இல்லை.. recoginition இல்லை என்று வேலை விடுபவர் அதிகமா??? உண்மை சொல்லும்..

பீர் எல்லாம் மிகப்படுத்தி சொல்லப்படுவது சாரே.. உண்மை அதுவல்ல..

ஒரு சனிக்கிழமை மாலையில் ஒரு பார் சென்று பாருங்கள்.. எத்தனை ஈஈ சார்ந்தோர். எத்தனை நொன் இட் சார்ந்தோர் இருக்கிறார்கள் என்று.. உன்மை புரியும்.

Anonymous said...

கிராமத்தான் அண்ணனுக்கு..
மிகச்சிறந்த படைப்பு
இதில் எதை எடுத்து நன்றாக இருக்கிறது என்று சொல்ல..!!
..கலக்கிடங்க போங்க..
__உங்களது அடுத்த படைப்புக்காக காத்திருக்கும் உங்கள் விசிறி__

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

தங்களுடைய வருகை மற்றும் கருத்துக்கு சதீஸ் கண்ணன் நன்றி...

Unknown said...

தங்களுடைய வருகை மற்றும் கருத்துக்கு வசந்தம் ரவி நன்றி...

Unknown said...

தங்களுடைய வருகை மற்றும்
கருத்துக்கு thisandthat நன்றி...

//சிரிப்புதான் வருது..இதை பார்க்க.. என்னமோ ஐ டி - ஐ டி ல தான் திருமணம் நடப்பது போல.. இருக்கு..எனக்கு தெரிந்தே மிக பல ஐ டி நண்பர்கள் வேறு துறை பென்களை மணந்துள்ளர். அதிலும் பலர் housewife.//

சரி எத்தனை பேர் அப்படி இருக்கிறார்கள்.... எனக்கு தெரிந்தவரை மிகவும் குறைவு.


//பீர் வாங்கி தரவில்லை என்று வேலையை ரிசைன் பன்னுபர்கள் அதிகமா? இல்லை.. சரியான சம்பளம் இல்லை.. recoginition இல்லை என்று வேலை விடுபவர் அதிகமா??? உண்மை சொல்லும்...//

உண்மையை சொல்லட்டுமா... சம்பளம் அதிகம் தரவில்லை என்பதற்க்காகத்தான் recoginition செய்கிறார்கள். சரி எவ்வளவு சம்பளம் வாங்கியும் ஏன் நீங்கள் மனநிறைவு அடையவில்லை......


//பீர் எல்லாம் மிகப்படுத்தி சொல்லப்படுவது சாரே.. உண்மை அதுவல்ல..//

இதற்க்கு பதில் பாமரன் அவர்கள் எழுதியுள்ள பதிவிலிருந்து...

அதுசரி எத்தனையோ துறைகள் இருக்கும்போது I.T என்கிற தகவல் தொழில் நுட்பத் துறையினர் மீது மட்டும் படத்தில் ஏன் இந்தப் பாய்ச்சல்?

நியாயம்தான்.

ஆனால்

மருத்துவர்கள்……….

பொறியியலாளர்கள்……….

கொளுத்தும் வெய்யிலிலும், கொட்டும் மழையிலும் தார் சாலை போடுபவர்கள்……….

என எவரும் இரவு பகல் பாராமல் உழைத்துவிட்டு வருகிறோம் எங்களுக்காக விடிய விடிய PUBS (மதுபானக் கூடங்கள்) களை திறந்து வையுங்கள்என்று கோரிக்கை வைக்கவில்லை. ஆனால் அப்படிப்பட்ட அதி அத்தியாவசியக் கோரிக்கையை வைத்தவர்கள் இந்த I.T துறையினர் மட்டும்தான். தென்னக உணவக உரிமையாளர்கள் சங்கம் “பன்னாட்டு நிறுவனங்களும்…. பெரும் தொழில் நிறுவனங்களும் மேலும் மேலும் வந்து கொண்டிருக்கும் இச்சூழலில் அரசு இரவு வாழ்க்கை குறித்தும் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்” என கோரிக்கை வைத்தது இம்மேதைகளுக்காகத்தான்.

http://pamaran.wordpress.com/

Chezhiyan said...

Dear Muthu!
I really like so much the way in which you had written concepts in your blog. what are you going to do save our mother tongue ? if possible, do something.
Thanks!

Anonymous said...

அத்தனையும் உண்மை...

அருமை நண்பா...

கட்டுப்பாடு மீறிய வாழ்வு, பிடிப்பு இழந்து விரக்தியில் தான் மிஞ்சும்.

அக வாழ்க்கைக்கும் கட்டுப்பாடு வகுத்தது தமிழ்கலாசாரம்...

"Modernisation", "IT" என்ற பெயரில் இன்று விலங்குகள் போல வாழ்வதை நன்றாகவே சொல்லி கொடுத்திருக்கிறது அமெரிக்க கலாசாரம்.

தொடருங்கள் உங்கள் பணியை,

வாழ்த்துகள்.

http://divahar.blogspot.com/

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
நெருப்புச் சக்கரம் said...

Machan pinittada....naan ivlo naala konjam konjama yosichu vachuthula nee yeelathayum pottu pirichitta...vaa vaa en namba ....unnai varverkiren....

Unknown said...

நன்றி நண்பா.....

//கட்டுப்பாடு மீறிய வாழ்வு, பிடிப்பு இழந்து விரக்தியில் தான் மிஞ்சும்.//

உண்மைதான்.........

நன்றியுடன் கிராமத்தான்

Unknown said...

நன்றி கண்ணன் சார்....

//if possible, do something.//

நாம் எல்லோரும் சேர்ந்து தான் செய்ய வேண்டும்.

அதுக்கு நிறைய வழிகள் இருக்கு... அதையே இன்னொரு பதிவாக போடலாம்...


நன்றியுடன் கிராமத்தான்

Unknown said...

எனது அருமைத்தோழனே...


உன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....

நன்றியுடன் கிராமத்தான்

Anonymous said...

இந்த blog மீதான என்னுடைய கருத்து திரு.பாமரன் அவர்களது பக்கத்தில்...

http://pamaran.wordpress.com/2007/11/07/%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae/

ரமேஷ் வைத்யா said...

கிராமத் தம்பி,
குறிப்பாக அகவாழ்க்கை பற்றி நீங்கள் சொல்லியிருந்தது கச்சிதமாக இருந்தது. உண்மையே இவ்வளவு சுவாரஸ்யமாக இருப்பது அரிது.
இப்படிக்கு
சீனியர் குடிகாரன்.

Anonymous said...

நண்பர்,

நீங்கள் சொல்லுகிற தீண்டாமை கல்லூரிகளிலேயே தொடங்கிவிடுகிறது. மருத்துவம் படிப்பவனுக்கு பொறியியல் படிப்பவன் தாழ்ந்த ஜாதி; பொறியியல் படிப்பவனுக்கு பி.எஸ்.சி. படிப்பவன் தாழ்ந்த ஜாதி, பி.எஸ்.சி. படிப்பவனுக்கு பி.காம். படிப்பவன் தாழ்ந்த ஜாதி, பி.காம். படிப்பவனுக்கு பி.ஏ. படிப்பவன் தாழ்ந்த ஜாதி. அதிலும் பி.ஏ. எகனாமிக்ஸ் படிப்பவனுக்கு பி.ஏ. தமிழ் இலக்கியம் படிப்பவன் தாழ்ந்த ஜாதி.

பரிணாம வளர்ச்சி என்பது குரங்கு மனிதனானது மட்டுமில்லை, நாலு வருணங்கள் இப்படி நானூறு அவதாரம் எடுப்பதிலும் வெளிப்படுகிறது. என் குடும்பமும் என்னை அறிவை வளர்த்துக்கொள் என்று கூறி படிக்க அனுப்பவில்லை. நல்லா படிச்சா பெரியவனாகி நிறைய சம்பாதிக்க முடியும்னு சொல்லி தான் அனுப்பினாங்க. குறைந்த பட்சம் நாம் பெற்றோர்களாக ஆகும்போது நாமாவது இந்த தவறை செய்யாமல் இருக்க வேண்டும். பிழைப்பின் நிமித்தம் உலகின் எந்த மூலைக்கு சென்றாலும், நம் குழந்தைகளுக்கு தாய்மொழியைக் கற்பிக்க வேண்டும். வசதி இருக்கிறவன் வாத்தியார் வைத்து கற்றுக் கொடுக்க வேண்டும். வசதி இல்லாதவன் தாய்மொழி அறிவை வளர்த்துக் கொண்டு தானே சொல்லிக் கொடுக்க வேண்டும்.

முன்னது நடந்தால் ”தமிழ் படித்து என்ன சம்பாதிப்பே” என்று கேட்பவர்களை வாயடைத்துப் போக வைக்க முடியும். பின்னது நடந்தால் இனிவரும் தலைமுறையாவது தாய்மொழியை மதிக்கிற தலைமுறையாக இருக்கும்.